
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது
நவம்பர் 22, 23 ஆகிய இரு நாட்களிலும் சிறப்பு ரயில் விழுப்புரம் திருவண்ணாமலை இடையே இயக்கப் படும்.
முதல் பயணிகள் ரயில், விழுப்புரத்தில் காலை 10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 12 மணிக்கு வந்தடையும்
திருவண்ணாமலையில் ஒரு மணிக்கு கிளம்பி விழுப்புரத்துக்கு மதியம் 2.45க்கு வந்தடையும்.
சிறப்பு ரயில் 2 விழுப்புரம் திருவண்ணாமலை இடையே இயக்கப்படும். விழுப்புரத்தில், இரவு 10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 11 40க்கு வந்தடையும்
மீண்டும் அதிகாலை 4.15க்கு கிளம்பி 5.55க்கு விழுப்புரம் சென்றடையும்
இதேபோல் மூன்றாவது சிறப்பு ரயில் வேலூர் திருவண்ணாமலை இடையே இயக்கப்படுகிறது வேலூரில் இரவு 9.30 க்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 11.20க்கு வந்தடையும்
திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.15க்கு கிளம்பி காலை 5.55க்கு வேலூர் சென்றடையும்