
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசின் கஜா நிவாரண பொருள் கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
அறந்தாங்கி காரைக்குடி சாலையில் பச்சலூர் பஸ் ஸ்டாப் அருகில் பச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தாங்களுக்கு இன்னமும் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என்றும் உடனடியாக வழங்கவேண்டும் என்று கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மறியல் செய்தனர்.இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் பேசி உரிய துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து மறியலை முடிவிற்கு கொண்டு வந்தார்.



