அன்று… ரஜினியை “யார் நீங்க?” என்று கேட்டவர்! இன்று… சமூக விரோதியாய்… கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
rajini santhosh - 2026

தூத்துக்குடி சம்பவத்தின் போது, மருத்துவமனையில் இருந்த சந்தோஷ் என்பவரிடம் ரஜினி ஆறுதல் சொல்லப் போக, “யார் நீங்க” என்று திருப்பிக் கேட்க, ரஜினியை டென்ஷன் ஆனார்.

ஆனால், அவரை ஊடக உலகம் தூக்கி வைத்துக் கொண்டாடியது. சந்தோஷ் ஏதோ புரட்சியாளர் போல் ஊடகங்களால் பிரபலப் படுத்தப் பட்டார். வழக்கம் போல், தமிழக செய்தி ஊடகம் எந்த நபரைத் தூக்கி வைத்துக் கொண்டாடுமோ அவர்களின் பின்னணி அபாயகரமாக இருப்பதுபோல், சந்தோஷின் பின்னணியும் இருக்க, அவர் இன்று கைது செய்யப் பட்டிருக்கிறார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றபோது தன்னைக் காண வந்த ரஜினியை “யார் நீங்க இப்போ எதுக்கு வந்தீங்க” என கேள்வி கேட்டு திணறடித்தவர் பண்டாரம் பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்!

கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்த வெளிமாவட்டத்தில் இருந்து வந்த மூன்று பேர்களுக்கு உதவியதாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கெடுத்து துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தோஷ் ஸ்ரீவைகுண்டம் போலீசாரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

சந்தோஷ் அனைத்து கல்லூரி மாணவர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.