அன்று ‘சரியாக’ செய்யாததால்… இன்று மீண்டும் வாலாட்டுகிறார்! கீ.வீரமணிக்கு எச்.ராஜா எச்சரிக்கை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

hraja - 2026

இந்து சமய நம்பிக்கைகளில் தலையிட்டு அவதூறு கிளப்பும் தி.க.தலைவர் வீரமணிக்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அன்று இந்துக்கள் சரியாக செய்யாததால் இன்று வீரமணி வாலாட்டுகிறார் என்று காட்டமாக விமர்சித்துள்ளார் ஹெச்.ராஜா.

இது குறித்து அவர் நம்மிடம் கூறியபோது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி இந்து கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது சட்டப்படி செல்லும்.

அனைத்து கோவில்களிலும் இது நிறைவேற்றப்பட வேண்டும். இதை கண்டித்து இந்து விரோத தற்குறி வீரமணி அறிக்கை விட்டதற்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை எல்லாவிதத்திலும் தெரிவிக்கவும்.

அரசு மதசார்பற்றதாக இருக்கலாம். ஆனால் இந்து கோவில்கள் இந்து மத நம்பிக்கை உள்ளோரின் வழிபாட்டுத்தலங்கள். இந்துக்களின் நம்பிக்கை குறித்து கருத்துச் சொல்ல மாற்று மத கைக்கூலி, இந்து விரோதி வீரமணிக்கு எவ்வித உரிமையும் இல்லை.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இழிவாகப் பேசிய போதே இவருக்கு சரியான பாடம் புகட்டியிருக்க வேண்டும். இந்துக்கள் அதை செய்யாததால் இன்று நம் மத நம்பிக்கையில் தலையிடுகிறார்.

நம் கண்டனம் வெறும் முகநூல் பதிவு மற்றும் அறிக்கைகளுடன் நிற்க வேண்டாம். அது வீதிக்கு வந்து ஆர்பாட்டம் போராட்டமாகவும் கூட இருக்க வேண்டும். ஆண்டாள் நாச்சியார் விஷயத்தில் காட்டிய ஆக்ரோஷம் இப்போது தேவை என்று கூறியுள்ளார் ஹெச்.ராஜா.

மேலும் அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.