புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,விவசாய தொழிலாளர் சங்கம்,ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் சங்கர் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் லட்சுமணன்,மேகவர்ணன்,செல்லமுத்து,ராதா,சரோஜா,ஜெயந்தி,தென்றல் கருப்பையா,கர்ணா,சாத்தையா,ஜான்,கணேசன்,தங்கராஜ்,பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காத்திருப்பு போராட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணபொருள் நிவாரணதொகை வழங்ககோரியும் கல்விக்கடன் பருவக்கடன் விவசாய கடன்களை ரத்து செய்யகோரியும்,தேசிய ஊரக வேலை திட்டப்பணிகளை தொடர்ந்து வழங்ககோரியும் கோசமிட்டு பேசினர்.




