திமுக., பாஜக.,வுடன் ரகசியப் பேச்சு! தமிழிசை சொன்னது உண்மையாகுமோ?!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

stalin edappadi - 2026

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி சரிவைச் சந்தித்துள்ளது. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா என்ற பிம்பத்தால் முழு வெற்றி பெற்ற அதிமுக., பின்னர் ஜெயலலிதா இல்லாமல், டிடிவி தினகரன் மூலம் கட்சியில் பிளவு கண்டு, வாக்குகள் பிரிந்துள்ள நிலையில், அதிமுக., சரிவைச் சந்தித்துள்ளதாகத் தெரியவருகிறது.

மக்களவைத் தேர்தலில் கடைசிக் கட்ட வாக்குப் பதிவும் நிறைவடைந்த நிலையில்,  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், தேசிய அளவில் பாஜக., பெரும்பான்மை பெறும் என்று கூறப் படும் நிலையில், தமிழகத்தில் வழக்கம் போல், மாறுபட்ட வகையில் திமுக., கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப் படுகிறது.

ஊடக நிறுவனங்களும், அவற்றின் கணிப்புகளும்:

சாணக்யா-நியூஸ் 24:

அதிமுக கூட்டணி6 
திமுக கூட்டணி31 
மற்றவை1 


இந்தியா டுடே-ஆக்ஸிஸ்:

அதிமுக0-4 
திமுக34-38 
மற்றவை–


டைம்ஸ் நௌ-விஎம்ஆர்:

அதிமுக கூட்டணி9 
திமுக கூட்டணி29 
மற்றவை0


நியூஸ் 18-ஐபிஎஸ்ஒஎஸ்:

அதிமுக கூட்டணி14-16 
திமுக கூட்டணி22-24 
மற்றவை–

 

ரிபப்ளிக்- சி வோட்டர்:

அதிமுக11 
திமுக27 
மற்றவை0

 

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக., கூட்டணி அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பு தெரிகிறது. காங்கிரஸ் அல்லாமல் திமுக., மட்டும் தனித்து அதிக இடங்களைப் பிடிக்கும் பட்சத்தில், திமுக., மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப் படுகிறது.

இதனிடையே, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியது போல், திமுக., பாஜக.,வுடனும் பேசுவது உண்மையோ என்ற கேள்வியை எழுப்புகின்றனர் சிலர்.

மத்தியில் பாஜக., ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு சில இடங்கள் தேவைப் படும் பட்சத்தில் திமுக., அதில் இடம்பெறக் கூடும் என்றும், அதற்காக அமைச்சர் பட்டியலைக் கூட திமுக., தயார் செய்து வைத்திருக்கக் கூடும் என்றும் அனுமானங்கள் உலவுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.