
இந்தியாவில் நாளுக்கு நாள்,பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், சீரழித்து கொலை செய்யும் சம்பவமும் அரங்கேறி அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இது தொடா் கதையாகவே இருந்து வருவது குறிப்பிடதக்கது. மேலும் ஒருபடி மேலே போய் பாதிக்கப்படும் சிறுமிகளை கொடூரமாக கொலை செய்துவிடுவது அதிகரிக்கவே செய்கிறது.
கோவையில் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியை சேர்ந்த ராதா என்ற சிறுமி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் அந்த பகுதியில் உள்ள மதியழகனின் ஆட்டோவில் சிறுமி பள்ளிக்கு சென்றுவருவது வழக்கமாக கொண்டிருந்தார்.
சிறுமியின் பெற்றோர் வீட்டை மாற்றி கோவை குனியமுத்தூர் குளத்துபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில்,கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மதியழகன் தொடர்ந்து சிறுமியை பார்பதற்காக குளத்துபாளையம் வந்து சென்றுள்ளார்.
வீட்டிலிருந்த அந்த சிறுமியை கடத்தி சென்று சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த தகவலை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததன் பேரில் போக்ஸோ சட்டத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



