
பொள்ளாச்சியை அடுத்துள்ள நவமலை பகுதியில் தாயின் கண்முன்னே காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அருகில் உள்ளது நவமலை இங்குள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜீ–சித்ரா தம்பதியினா் ராஜீ வேட்டை தடுப்பு காவலராக வேலைபார்த்து வருகிறார்.
ராஜீ-சித்ரா தம்பதியினருக்கு ரஞ்சனா(எ)ரஞ்சனி (வயது) 7 மகள் உள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை சித்ரா தனது மகள் ரஞ்சனியை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு சென்று விட்டு நவமலைக்கு திரும்பி உள்ளார்.
அப்போது இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனா்.
அப்போது அந்த பகுதியில் திடீரென வந்த காட்டு யானை ஒன்று சித்ராவையும், சிறுமி ரஞ்சனியை துரத்தியது
இதில் அலறியடுத்து கொண்டு ஓடிய சிறுமி ரஞ்சனியை காட்டுயானை தாக்கியது.
இதனால் அலறிய சிறுமி ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கம் உள்ளவா்கள் ஓடி வந்துள்ளனா்.
இதனையடுத்து காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.
பின்னர் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமி ரஞ்சனியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலே சிறுமி ரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் கண்முன்னே காட்டு யானை தாக்கி மகள் இறந்த சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து இறந்த சிறுமி ரஞ்சனியின் உடல் உடல்கூறு ஆய்வுக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



