ஆடுகளின் ரத்தம் குடித்து …. இழுத்துச் சென்ற சிறுத்தை! அச்சத்தில் மக்கள்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

goats - 2026

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஏளூர் அடி மலை மாதையன் கோவில் அருகே உள்ள ரவி என்பவர் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் இவரது தோட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் சிறுத்தை, புலி, ஓநாய் போன்ற மிருகங்கள் தோட்டத்துக்குள் புகுந்து இரை தேடுவது வழக்கம்.

சம்வத்தன்று தோட்டத்தில் இருந்த ரவியிடம் பேசியபோது நேற்றிரவு தனது 12 ஆடுகளை பட்டியில் கட்டி வைத்திருந்த போது நள்ளிரவு நேரத்தில் தோட்டத்தின் கம்பி வேலியை தாண்டி வந்த சிறுத்தை அங்கு கட்டி்வைத்திருந்த 12 ஆடுகளை வரிசையாக கடித்து ரத்தத்தை் குடித்தது.

மேலும் கடித்த ஆடுகளில் ஒன்றை உணவிற்காக வனப்பகுதிக்கு இழுத்து சென்று கம்பி்வேலியை தாண்ட முடியாமல் ஆட்டின் பாதி இறைச்சியை சாப்பிட்டு்விட்டு மீதியை அங்கேயே விட்டு விட்டு வேலியைத் தாண்டி் வனப்பகுதிக்கு சென்று விட்டது என்று கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்நிருந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் கால் தடம் மற்றும் பற்களின் அளவு ஆகியவற்றை பதிவு செய்த பின்ன இந்த பகுதியில் கண்கானிப்பு கேமரா பொருத்தி் சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்த பின் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்மீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.