
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் பின்க் சிட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள சங்கீதா மெமோரியல் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஜோதிடம் மூலம் அவர்கள் நோயைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவத் துறை வட்டாரத்தில் இது ஒரு புதிய அனுபவமாக உள்ளது
.இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் அனைத்து புறநோயாளிகளுக்கும், உள்நோயாளிகளுக்கும் அவர்களது ஜாதகம் பார்க்கபட்டு அந்த ஜாதககாரருக்கு அதிகமாக தாக்கும் நோய்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு அதற்கேற்ற முறையில் நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகளை செய்து நோயாளிகளின் நோய்களை குணப்படுத்தி வருகின்றனா்.
இதன் மூலம் அந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மகேஷ் குல்கர்னி கூறியதாவது எங்களது மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு ஜோதிடம் மூலம் அவர்களது நோயை கண்டறிந்து அதற்குண்டான சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த முறையான மருத்துவத்தை வாடிக்கையாளர் அனைவரும் திரும்பியுள்ளனர். இதன் மூலம் 70 முதல் 80 நோயாளிகளுக்கு இந்த புது முறையான மருத்துவத்தை செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த மருத்துவமனையில் 22 மருத்துவர்கள் இத்துறையில் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புது முறையானது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலில் ஜோதிடம் பார்த்து பின்னர் அவர்களுக்கு என்ன வியாதி உள்ளது என்பதை கண்டறிந்து இதை எடுத்து அதற்கு உண்டான சிகிச்சையை அளித்து வருகின்றனர்
இந்த முறையானது மருத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிகிறது.
இதையடுத்து இனிவரும் காலங்களில் பாடப்பிரிவிலும் இந்த மாதிரியான மருத்துவத்தை கொண்டுவரவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அங்கு வரும் நோயாளிகளிடம் இதுகுறித்து கேட்டபோது இந்த முறையானது மிகவும் புதுமையாக உள்ளது இதன் மூலம் நாங்கள் விரைவில் குணமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.



