நேசமணி நலமா? இந்திய அளவில் #Pray_for_Neasamani டிரெண்டானது ஏன்?

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்

nesamani hashtag - 2026

நேசமணி என்றதும் பலருக்கும் நினவுக்கு வருவது வடிவேலு நடித்த கேரக்டர் என்றால் அது இந்தக் கால இளசுகளுக்குத்தான். ஆனால், உண்மையில் மார்ஷல் நேசமணி என்ற பெயரில் இருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த தலைவர்தான் மொழி வாரி மாகாணப் பிரிவினையின் போது முன்னணியில் களத்தில் இருந்தவர் என்று வயதானவர்கள் மார்தட்டிச் சொல்வார்கள்.

அதே நேரம், சினிமா காமெடியில் நேசமணி பொன்னையா தெரு என்பதை, நாசமா நீ போனியா என்று ஜனகராஜ் காமெடியின் வாசித்த காட்சி தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இப்போது, இளையதலைமுறை ரசிகர்களால், வடிவேலு அந்த முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டு, நேசமணியாக நிற்கிறார்.

இந்திய அளவில் டிவிட்டரில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது #Pray_for_Neasamaniஇந்த ஹேஸ் டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கானதற்கு ஒரு நகைச்சுவையான பதிவே காரணமாக அமைந்துள்ளது.

சிவில் இன்ஜினியரிங்க் லேனர்ஸ் என்ற பக்கத்தில் சுத்தியல் படத்தை போட்டு இதை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதில் நம்ம ஊரு குசும்புக்கார நெட்டிசன் ஒருவர் ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு சுத்தியலால் அடிபட்ட காட்சிகளை எடுத்து சொல்லி உள்ளார்.

அதனையடுத்து, ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி என்பதால் #Pray_for_neasmani என்ற ஹேஸ்டேகை நெட்டீசன்ஸ் டிரெண்ட் செய்துள்ளனர்.

அதனால், #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் சுமார் 5 மணி நேரத்துக்கும் கூடுதலாக ட்ரெண்டில் இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.