போக்குவரத்து விதிமீறல் புகார்களுக்கு என புதிய செயலி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

a k viswanathan - 2026

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிக்க போலீஸாருக்கு 352 அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன! மேலும்,  புகார் அளிக்க புதிய செல்போன் செயலி இவற்றை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் இன்று அறிமுகப்படுத்தினார்

இந்த நவீன கருவி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க பயன்படுத்தப்படுகிறது! இதில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உள்ளதால் காவலர்களின் இருப்பிடத்தையும் கண்காணிக்க முடிகிறது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் நவீன கருவி இணைக்கப்படும்! ஓட்டுநர்கள் தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்! கருவி மூலம் பரிந்துரை செய்யவும் வசதி உண்டு~

இந்த கருவி மற்றும் செல்போன் செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன், நீங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இதை பயன்படுத்தலாம்! உங்கள் புகார் கடிதம் அல்லது மெயிலுக்கு பதிலாக வீடியோவாக அனுப்பினால் எங்களுக்கும் தெளிவு கிடைக்கும்!

உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று செயலாற்றுவதற்கான திட்டம் இது! நவீன தொழில் நுட்பங்களை மேம்படுத்தி மக்கள் சேவையை அதிகப்படுத்துவோம்!

இந்த செயலியில் புகார்களே வராத சூழல் உருவாக வேண்டும்! இந்தக் கருவி மூலம் அபராதம் கட்டப்படுவதை எளிதாக்கியுள்ளோம். சாலை விதிகளை  மதிக்க வேண்டும் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது சாலை விபத்துகளால்தான்!

வாகனங்கள் அதிகரித்துள்ள கால கட்டத்தில் சுய கட்டுப்பாடு மட்டுமே விபத்துகளை குறைக்கும்! இந்தக் கருவியை பயன்படுத்துவதற்கான தேவையே ஏற்படாத நிலை வர வேண்டும்…என்று கூறினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.