களை கட்டும் குற்றால சீஸன்! அருவிகளில் நீர் வரத்து!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்

courtallam season - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குற்றாலம் ஆன்மிக, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது மே மாத கோடை கடந்து, ஜூன் மாதம் சீஸன் தொடங்கியுள்ளது. வழக்கம் போல் ஜூன் 3ம் தேதிக்குள் தொடங்கும் சீஸன் இந்த முறை ஒரு வாரம் தாமதமாக ஜூன் 9ம் தேதி தொடங்கியது.

கேரளத்தில் மழை பெய்யும் நிலையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சீஸன் களை கட்டி வருகிறது. சிலுசிலு வென காற்றுடன், மேகங்கள் கூடி அவ்வப்போது தூறலும் சாரலுமாக களைகட்டி வருகிறது.

fruitstall - 2026

குற்றாலம் மெயின் அருவியில் இரு தினங்களுக்கு முன் தண்ணீர் விழத் துவங்கி, இப்போது தண்ணீ நன்றாக விழுகிறது. இருப்பினும், இது தொடக்க கால அருவி நீர் என்பதால், உள்ளூரைச் சேர்ந்த எவரும் அருவிக்கு சென்று நீராடவில்லை. தற்போது இந்த வார இறுதியில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று கூறப் படுகிறது.

இந்த வருடம் பழக்கடைகள், சீஸனை ஒட்டி அதிகம் பேர் ஏலம் எடுத்து வழக்கம் போல் கடைகளை ஒவ்வொன்றாகத் திறந்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் விதவிதமான பழங்கள் காண்பவர் கண்களுக்கு விருந்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.