குற்றால சீஸன் நிலவரம்: பரவாயில்ல… வரலாம் வாங்க…!

Published:

courtallam june24 2019 - 2026

திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றாலத்தில் சீஸன் தற்போது பரவாயில்லை என்ற ரகத்தில்தான் உள்ளது. பெரிய அளவில் மழைப் பொழிவு இல்லை என்றாலும், ஓரளவு தூறலும் சாரலும் இருப்பதால், இதமாக இருக்கிறது.

கடந்த இரு நாட்களாக கன மழை இல்லை. இருப்பினும், சென்ற வாரத்தில் இருந்த மோசமான வறண்ட நிலை இல்லை. எனவே மெயின் அருவியில் தண்ணீர் படர்ந்து விழுந்தது. பெண்கள் குளிக்கும் பகுதியிலும் ஓரளவு நன்றாக நீர் விழுந்தது.

எனவே மெயின் அருவியில் வரிசையில் நின்று நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர். ஆனால் ஐந்தருவியில் கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே ஓரிரு நிமிடங்கள்தான் அருவியில் தலையைக் காட்ட முடிந்தது என்று பயணிகள் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்தனர்.

குற்றாலம் மெயின் அருவியில் இன்று ஓரளவு நன்றாகவே தண்ணீர் விழுகிறது. காற்றும் சாரலும் இதமாக இருப்பதால் பயணிகள் நன்றாக இயற்கையின் கொடையை அனுபவிக்கலாம்!

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (24-06-2019)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 40.50 அடி
நீர் வரத்து : 340.63 கன அடி
வெளியேற்றம் : 204.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 53.31 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 54.39 அடி
நீர் வரத்து : 2 கனஅடி
வெளியேற்றம் : 100 கன அடி

மழை அளவு:
பாபநாசம்: 6 மி.மீ
சேர்வலாறு: 2 மி.மீ
கடனா:  2 மி.மீ
குண்டாறு: 9 மி.மீ
அடவிநயினார்: 14 மி.மீ
செங்கோட்டை: 4 மி.மீ

Related articles

Recent articles

spot_img