தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாடிய மாணவர்கள் கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

bus day - 2026

சென்னையில் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஷெனாய் நகர் இருந்து புறப்பட்ட மாநகரப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென உள்ளே ஏறியதால், அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கிவிட்டனர்.

இதை அடுத்து, பேருந்தின் மேற்கூரையிலும், ஜன்னல் கம்பிகளிலும் நின்ற படியும், ஆபத்தான முறையில் தொங்கியபடியும் கூச்சல் எழுப்பி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினரைப் பார்த்ததும் பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் போலீசார் அவர்களைத் துரத்திச் சென்று,அவர்களில் 13 பேரை கைது செய்தனர்.

கடந்த வருடம் கைகளில் பட்டாக் கத்தி, வாள் இவற்றை வைத்துக் கொண்டு, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் சிலர் ரயில் நிலைய பிளாட்பாரம்களில் தேய்த்த படியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். அவர்களைப் பிடித்த ரயில்வே போலீஸார் பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டதை அடுத்து விடுவித்தனர்.

இந்நிலையில் சமூக இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகிவருகிறது. அதில், மாணவர்கள் சிலர் பஸ்ஸின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு பயணிக்கின்றனர். பஸ்ஸுக்கு முன் இரு மாணவர்கள்  ஒரு பைக்கில் செல்கின்றனர். திடீரென பஸ்ஸுக்கு முன் சென்ற பைக் நிலை தடுமாறி நின்றுவிடவே, பஸ் டிரைவர் அவர்கள் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் அடிக்கிறார். அதனால் பஸ் மேற்கூரையில் இருந்த மாணவர்கள் முன்னே சரிந்து விழுகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, இது ஒன்றே போதும் பஸ் டே கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் இணையதள வாசிகள். அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.