ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

rajendran-arrested-chit சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கு 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ர.தன்ராஜ் (51). இவர் விருகம்பாக்கம் ஸ்பெசிபிக் வில்லா முதல் பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த அ.ராஜேந்திரனிடம் (57) ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தாராம். இதேபோல பலர் ராஜேந்திரனிடம் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பலரது சீட்டு முதிர்வடைந்த பின்னரும், ராஜேந்திரன் அவர்களுக்கு பணத்தைக் கொடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தன்ராஜ், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவில் புகார் செய்தார். தன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ராஜேந்திரன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து, ராஜேந்திரன் புதன்கிழமை நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், சென்னை தங்கச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தனது மனைவி பெயரில் கோயம்பேட்டில் சாந்தி ஹோட்டல் வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், குடும்பச் செலவுக்காகவும், ஹோட்டல் தொழிலில் அதிக வருமானம் இல்லாமலும், ஹோட்டலை விரிவுபடுத்தவும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் ஏலச்சீட்டு நடத்தி, அதில் கிடைத்த பணத்தை குடும்பத்துக்காகவும், ஹோட்டலை விரிவாக்கவும் செலவு செய்துள்ளார். மேலும், கந்துவட்டிக்கு பணம் கொடுத்தும் உள்ளார். இதனால் பணத்தைக் கட்டியவர்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறியுள்ளார். இவ்வாறு ஏலச்சீட்டு மூலம் ராஜேந்திரன் ரூ.1.50 கோடி வரை மோசடி செய்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போதைய செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம்…