சென்னை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி : பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதியை கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை நேற்று தொடங்கி வைத்தார். துறைமுகத்தில் கப்பல்கள் வந்து செல்வதைக் கண்காணிப்பதற்காக ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கப்பல்த் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர், இந்த வசதி காமராஜர் துறைமுக வரலாற்றில் ஒரு மைல் கல். இதன் மூலம் கப்பல்கள் வந்து செல்வதை மட்டுமின்றி எண்ணெய்க் கசிவு ஏதேனும் ஏற்பட்டாலும் கண்டறிய முடியும். இரண்டு கப்பல் தளங்களுடன் தொடங்கப்பட்ட இத்துறைமுகத்தில் தற்போது ஆறு தளங்கள் உள்ளன. மேலும் இரண்டு தளங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் விரைவில் ஆண்டுக்கு 50 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனை இத்துறைமுகம் பெறும் என்றார்.