செல்போன் கடைக்குள் வேன் புகுந்ததில், ரிசார்ஜ் செய்ய வந்தவர் உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

accident capita - 2026

கரூரில் மன வளர்ச்சி குன்றிய இளைஞர் ஓட்டிச் சென்ற வேன் செல்போன் கடைக்குள் புகுந்ததில், செல்போன் ரிசார்ஜ் செய்ய வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் பழைய திண்டுக்கல் ரோட்டில் லட்சுமிராம் திரையரங்கத்தை அடுத்து, ஒரு தனியார் மொபைல் கடையில் ஆனந்த் என்ற 43 வயது நபர், தனது போனை ரிசார்ஜ் செய்ய கடைக்குள் நுழைந்தார்.

அதேநேரம், அப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஏற்றப்பட்ட மினி வேனை அதே பகுதியை சார்ந்த கார்த்திக் என்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் எடுக்க முயற்சித்தார்.

அப்போது வாகனம் திடீரென்று செல்போன் கடைக்குள் புகுந்தது. இதில் ரிசார்ஜ் செய்ய வந்த ஆனந்த் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.