அத்திவரதரை தரிசிக்க பக்தர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், கட்டுக்கடங்காத வகையில் பக்தர் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். நேற்று வரை அத்திவரதரை காண 8.50 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதன் கிழமை இன்று முதல், அதிகாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும், குறிப்பாக வட இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் வருவதால், இது ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கான வசதிகளை சரிவர செய்து கொடுக்கவில்லை என்று, குறை கூறுகின்றனர். வெய்யில் பிளந்து கட்டுவதால், நிழல் கூரை இன்றி, கோயிலுக்கு வெளியே நான்கு மாட வீதிகளிலும் சுடும் தரையில் கால்கள் புண்ணாக பக்தர்கள் வரவேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.
தரை விரிப்புகள் ஓரமாக உள்ளதால், அவற்றையும் மீறி பக்தர்கள் வரவேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.




