கோவையில் மாநகர போலீசார் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
கோவையில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு, அலுவலகங்களில், பீளமேடு, உக்கடம், கரும்புகடை ஆகிய 3 இடங்களில் கோவை மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இலங்கை இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தமிழகத்தில் கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிலருடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை கோவை நாகை தென்காசி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் கோவை மாநகர போலீசார் சந்தேகப்படும் நபர்கள் குறித்து இன்று காலை முதல் மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்




