ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.
பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது அண்ணாவின் நினைவிடத்துக்கு வெயிலில் காலணி அணியாமல் சென்று கல்லறையை தொட்டு வணங்கினேன். நான் உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டு வந்திருக்கிறேன்.
அப்போது அவரிடம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உங்களை எட்டப்பன் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, வைகோ பதில் எதுவும் கூறாமல் தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.
சிறநà¯à®¤ செயதித௠தொகà¯à®ªà¯à®ªà¯. செயதிகளை அனà¯à®ªà¯à®ªà¯à®®à¯ வழிமà¯à®±à¯ˆà®¯à¯ˆ சொலà¯à®²à¯à®™à¯à®•ளà¯. நனà¯à®±à®¿.
பீம. சதà¯à®¤à®¿à®¯à®¨à®¾à®°à®¾à®¯à®£à®©à¯.