கள்ள ஓட்டுப் புகார்: ஈக்காட்டு ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

சென்னை தமிழகம்
ottu 2 - 2026

திருவள்ளூர், ஈக்காடு பகுதியில் கள்ள ஓட்டு புகார் காரணமாக தேர்தல் நிறுத்தம். வாக்கு சீட்டுகளை தூக்கி எறிந்து, போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு. வாக்குச்சாவடி முன்பு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சியில் கள்ள ஓட்டு புகார் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தாமரைவனி ராமச்சந்திரன் சின்னத்தில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்ட வாக்குச் சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்கு சீட்டுகளை தூக்கி எறிந்து, போராட்டம் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. வாக்குச்சாவடி முன்பு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.