
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் “வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து (27.12.19) முதல் நாள் உத்ஸவத்தில், ஸ்ரீ நம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபயஹஸ்தம் , கர்ணபூஷணம் (காது அணி), பவளமாலை, நெல்லிக்காய் மாலை, சூரிய பதக்கம் ஆகியன தரித்து அழகிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.



