
பிரபல தமிழ் சினிமா திரைப்பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் வழங்குகிறார்.
இது குறித்த அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பிரபல பாடகி சின்மயி, தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. ஆம், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப் போகிறாராம்.
நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வெல்டன்! தனியார் பல்கலைக்கழகமே, உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மீ டூ பிரச்சனையில் பாடலாசிரியர் வைரமுத்து மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை இதுவரையில் அவர் மறுக்கவுமில்லை என்பதால், பாடகி சின்மயியின் ட்வீட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த ஆதரவு பெருகி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மீ டூ பிரச்சனை காரணமாகவே வைரமுத்துவிற்கு பாடல் எழுதும் வாய்ப்பு தரப்படவில்லை என்கிற தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இது தவிர, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மீ டூ பிரச்சனையில் வைரமுத்து சிக்கியப் பிறகு, அவருக்கு பெரும்பாலும் பாடல் எழுதும் வாய்ப்புகளைத் தருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Yes, I know this doctorate is for his prowess in the language which is well established.
— Chinmayi Sripaada (@Chinmayi) December 26, 2019
The way he went on, they might as well add a doctorate for being a serial molester.
Also well done, SRM. You couldn’t have chosen a better example for your students on ‘Role Model’ 2/3