
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வழங்கப்படுகின்றன.
நாள் 08-06-2020 (திங்கட்கிழமை)நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் , சென்னை 600002.
கொரோனோ நோய்த்தொற்றைத் தடுக்கும் பணியில் மருத்துவத் துறையினர், காவல்துறையினர், உள்ளாட்சித் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் முனைப்பாக முன்களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நமது ஊடகத்துறையினர்.
மக்கள் சேவையில் கொரோனா விழிப்புணர்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஊடகத்துறையினரில் இன்றுவரை 100க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 70க்கும் மேற்பட்ட நண்பர்கள் குணமடைந்துள்ளனர். மற்ற நண்பர்களும் நலமுடன் உள்ளனர்.
ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் முன்களப் பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகை ஊடகத்துறையினர் நலனுக்காக *தமிழக அரசின் ஆதரவுடன் மல்ட்டி விட்டமின் மற்றும் ஜிங்க் சல்பேட் மாத்திரைகளையும் , ஹோமியோபதி மருத்துவர் திரு.நிர்மல்குமார் அவர்களின் ஆதரவில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையானஆர்சனிக் ஆல்பம் 30 மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றை 08-06-2020 அன்று வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நடத்தத் திட்டமிட்டுள்ள இந்த நிகழ்வில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையரும் பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு அதிகாரியுமான மதிப்புமிகு திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்கள் பங்கேற்கிறார்.
களத்தில் கடுமையான பணிச்சூழலில் பணியாற்றி வரும் ஊடகத்துறை நண்பர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
காலத்தின் தேவையைக் கருதி இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது .
08-06-2020 திங்கட்கிழமை பிற்பகல் முதல் களப்பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகை – ஊடக நண்பர்கள் நமது மன்றத்தில் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
- பாரதிதமிழன்,
இணைச் செயலாளர், சென்னை பத்திரிகையாளர் மன்றம்