பாஜக., விருகம்பாக்கம், கே. கே. நகர் மண்டல் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 ஏழை எளிய மக்களுக்கு ₹1000/- மதிப்புள்ள வேட்டி, சேலை, பட்டாசு, இனிப்பு – காரம், கொரோனா பாதுகாப்பு முக கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பிஜேபியின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் , முக்கிய விருந்தினராக பங்கேற்று, உதவிப் பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட தலைவர் சந்துரு, தலைமையில் மாநில செய்தி மற்றும் ஊடகத் துறை தலைவர் M.K.ரவிச்சந்திரன், மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதர், கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலச் செயலாளர் பெப்சி சிவா, தென் சென்னை மாவட்ட மகளிர் அணி லலிதா மோகன், மண்டல் தலைவர் A. தீனதயாளன்ஆகியோர் பங்கேற்றனர்!
பாஜக., மாநில மற்றும் நிர்வாகிகள் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மெஜஸ்டிக் ஹரி ஏற்பாடு செய்திருந்தார்.