சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் ..

1752171 vinayagar1 - 2026

விநாயகர் சதுர்த்தி விழா 31- ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஆக 31- ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கொசப்பேட்டையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஒன்று ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறிய வகையிலான களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி சென்னை கொசப்பேட்டையில் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு பல்வேறு விதமான கண்கவர் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

2 அடி உயரம் வரை இங்கு விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. ரூ.100 முதல், ரூ.1000 வரை விலையில் சிலைகள் களிமண்ணால் தயாராகி வருகின்றன. பல்வேறு விதமான வடிவில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு மெருகேற்றப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

மேலும் கொசப்பேட்டையில் ஐந்து அடி முதல் 12 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர், பெரியபாளையம் திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளன. கொசப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு, வெங்கடேசன் தெரு, ஏமிதெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பெரிய வகையிலான விநாயகர் சிலைகள் தற்போது சாலையோரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. கம்பீரமாக பலவித வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கிறார்கள். மேலும் 31-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா பூஜைக்காக இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பிரமாண்ட விநாயகர் சிலைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். வெயில், மழை பாதிப்பில் இருந்து தடுக்க அனைத்து விநாயகர் சிலைகளும் பாலித்தின் கவரில் மூடப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories