அ.தி.மு.க. அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு..

images 70 - 2026

ஓபிஎஸ் கட்சி அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால் அ.தி.மு.க. அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்துக்கு பிறகு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்த தீர்ப்பை தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு சென்று பணிகளை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கட்சி அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கு பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை போலீசில் ஓ.பி.எஸ். தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனு நிராகரிக்கப் பட்டுள்ளது. உரிய அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே ஓ.பி.எஸ். உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இருப்பினும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் மீண்டும் செல்ல முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை புகார் அளித்துள்ளார்.

அதில், அ.தி.மு.க. அலுவலகத்தில் மீண்டும் மோதல் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அங்கு 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நீங்கி இயல்பு நிலை திரும்பும் வரை அ.தி.மு.க. அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அ.தி.மு.க. அலுவலகம் முன்பு உள்ள அவ்வை சண்முகம் சாலையில் தீவர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories