சென்னை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க படகுகள் தீயணைப்பு வீரர்கள்..

ChennaiRains EPS 1 - 2026

சென்னை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 40 படகுகள்: தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.

சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன. காவல் துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுடன் தீயணைப்பு வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை தீவிரமாகி இருப்பதை தொடர்ந்து சென்னையில் தீயணைப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் நேரங்களில் மக்களை அதில் இருந்து காப்பாற்றி வெளியில் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். சென்னையில் தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களிலும் நிலைய அதிகாரிகள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன. அதே போன்று 40 மின்மோட்டார்களையும் தீயணைப்பு அதிகாரிகள் தயார்படுத்தி வைத்து உள்ளனர். தீயணைப்பு துறையில் பணியில் உள்ள அதிகாரிகள் முதல் களப்பணியாற்றும் வீரர்கள் வரை அத்தனை பேரும் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் என 900 பேர் 24 மணி நேரமும் பணியில் உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மழை பாதிப்பின் போது சாலைகளில் சாய்ந்து விழும் மரங்கள் மற்றும் முறிந்து விழும் மரங்களை அகற்றுவதற்கும் தீயணைப்பு வீரர்கள் தயாராக உள்ளனர். இதற்காக ‘பவர் ஷா’ எனறு அழைக்கப்படும் மரம் அறுக்கும் எந்திரங்களையும் தீயணைப்பு அதிகாரிகள் தயார்படுத்தி வைத்து உள்ளனர். இது தவிர 3 பெரிய மோட்டார் பம்புகளும் தயாராக உள்ளன. சென்னை மாநகராட்சி, காவல்துறை ஆகியோர்களுடன் தீயணைப்பு துறையினர் இணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. இதற்காக காவல் துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுடன் தீயணைப்பு வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து செல்ல வழி ஏற்படுவதுடன் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெறும் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

1785602 annanagar - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories