
தென்னிந்தியாவில் மிக முக்கியமான பகுதி பெங்களூரு மாநகரத்திற்கு திருநெல்வேலியில் இருந்து ஓர் இரவு நேர விரைவு வண்டி தினசரி தென்காசி ராஜபாளையம், சேலம் வழியாக இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில், இன்று தெற்கு ரயில்வே தலைமையகம் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சென்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கத் தலைவர் ‘சுகந்தம்’ என்.எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் ஹரிசங்கர் மற்றும் சங்க நிர்வாகிகள் சென்று ரயில்வே உயர் அதிகாரிகளைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.
செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு வண்டி(16847/16848) மொத்த பெட்டிகளின் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்த வேண்டும்.
பெங்களூரு மாநகரத்திற்கு திருநெல்வேலியில் இருந்து ஓர் இரவு நேர விரைவு வண்டி தென்காசி ராஜபாளையம், சேலம் வழியாக இயக்க வேண்டும்.சிலம்பு அதிவிரைவு வண்டியை(20681/20682) தினசரி சேவையாகவும், கூடுதல் பெட்டிகளோடும் இயக்க வேண்டும்.பொதிகை அதிவிரைவு வண்டிக்கு(12662) ஒரு வழித்தில் மட்டும் சென்னை நோக்கி செல்லும் போது மாம்பலம் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும்.
குருவாயூர்-புனலூர் இன்டர் சிட்டி விரைவு வண்டியை (16327/16328)மதுரை-செங்கோட்டை-மதுரை வண்டியுடன் இணைத்து மதுரை -ராஜபாளையம்-குருவாயூர் வரை நீட்டிக்கும் திட்டத்தை சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் துவங்கும் முன் செயல்படுத்தவேண்டும்.சபரிமலை சிறப்பு ரயில்களில் சிலவற்றை மதுரை,ராஜபாளையம், செங்கோட்டை, புனலூர் வழியாக இயக்க வேண்டும்.ஆகிய கோரிக்கைகளை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
துணை இயக்குதல் மேலாளர், தெற்கு இரயில்வே,தெற்கு இரயில் பொது மேலாளரின் செயலாளர்.,சென்னை இரயில்வே கோட்ட மூத்த இயக்க மேலாளர் மற்றும் உதவி இயக்குதல் மேலாளர்(பொது)
ஆகியோரை நேரில் சந்தித்தும்,மற்றும்முதன்மை இயக்குதல் மேலாளர், தெற்கு ரயில்வே,முதன்மை வர்த்தக மேலாளர், தெற்கு ரயில்வே
,சென்னை ரயில்வே கோட்ட மேலாளர்ஆகிய அதிகாரிகளின் அலுவலகத்தில் கோரிக்கை மனுவைச் சமர்பித்துள்ளனர்.
உடனடியாக செங்கோட்டை-மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு வண்டி (16847/16848) கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிதுள்ளனர்.ஏனைய கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொல்லம் எம்.பி பிரேமச்சந்திரன் மற்றும் கொடிக்குன்னில் சுரேஷ் எம்.பி ஆகியோர் குருவாயூர் -புனலூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் துவங்கும் முன் மதுரை வரை நீட்டிப்பு செய்யவும், எர்ணாகுளம் -வேளாங்கன்னி சிறப்பு ரயில் வாரம் மூன்று நாட்கள் ரெகுலர் சர்வீஸ் ஆக இயக்கவும், புனலூர் -விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மின்மயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து கொல்லத் தில் இருந்து மதுரை, திருநெல்வேலி க்கு தினசரி ரயில் இயக்கவேண்டும்
கொல்லம்-திருப்பதி, எர்ணாகுளம் -செங்கோட்டை-ராமேஸ்வரம் , மங்களூர் -கொல்லம்-செங்கோட்டை-ராமேஸ்வரம் ரயில் இயக்க தென்னக ரயில்வே பொதுமேலாளர் மற்றும் ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி வந்தனர்.





