December 6, 2025, 6:58 PM
26.8 C
Chennai

T20 WC 2022: அரையிறுதிக்கு செல்லப் போகும் அணிகள்

t20wc - 2025

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதினெட்டாம் நாள் – 2.11.2022

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று குரூப் 2 பிரிவில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஜிம்பாபே நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இரண்டாவது ஆட்டத்தில் இந்திய, வங்கதேச அணிகளும், சற்று நேரம் மழையும் விளையாடியது.

முதல் ஆட்டம் ஜிம்பாபே-நெதர்லாந்து
ஜிம்பாபே அணியை (19.2 ஓவரில் 117 ரன், சீன் வில்லியம்ஸ் 28, சிக்கந்தர் ராசா 40, மீகிரன்3/29) நெதர்லாந்து அணி (18 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 120 ரன், மேக்ஸ் ஓ டவுட் 52, டாம் கூப்பர் 32) ஐந்து விக்கட் வித்தியாசத்தில் வென்றது.


இந்த விளையாட்டு எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள். ஏனென்றால் இதற்கடுத்து இதே மைதானத்தில் இந்தியா, வங்கதேச அணிகளின் ஆட்டம் இருந்தது. எனவே மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமா? இல்லை பந்துவீச்சிற்கு சாதகமா? சுழப்பந்துவீச்சிற்கா? இல்லை வேகப் பந்துவீச்சிற்கா? என பல கேள்விகள் இருந்தன. ஆனால் இந்த ஆட்டம் ரொம்ப சுமார் ரகமாக இருந்தது.

இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் ஆட்டமாக இருக்கவில்லை.


ஜிம்பாபே அணியில் இரண்டு பேட்டர்கள் இரட்டை இலக்க ரன்களை எடுத்தார்கள். மீதமுள்ளவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்கள். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை.

அதற்கடுத்து ஆடவந்த நெதர்லாந்து அணியிலும் இரண்டு பேட்டர்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஆடினார்கள். ஜிம்பாபே அணியின் ஸ்கோரான 117 என்பது மிகக்குறைவு என்பதால் நெதர்லாந்து அணி 18 ஓவரில் 120 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


இந்த வெற்றி ஜிம்பாபே, நெதர்லாந்து இரண்டு அணிகளும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை குறைத்துள்ளது. ஒருவேளை ஜிம்பாபே அணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்கு ஒரு வாய்ப்பி கிடைத்திருக்கலாம்.


இரண்டாவது ஆட்டம், இந்தியா-வங்கதேசம்

இந்திய அணி (184/6, கே.எல்.ராகுல் 50, விராட் கோலி 64, சூர்யகுமார் யாதவ் 30, அஷ்வின் 13, ஹசன் மஹ்முத் 3/47) வங்கதேச அணியை (16 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 145 ரன், லிட்டன் தாஸ் 60, நஜ்முல் 21, நூருல் ஹசன் 25, அர்ஷதீப், ஹார்திக் பாண்ட்யா தலா 2 விக்கட்) டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி ஐந்து ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. நாலாவது ஓவரில் ரோஹித் சர்மா, 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் இன்று அதிரடியாக ஆடினார். 32 பந்துகளில் 50 ரன் எடுத்து 9.ச் ஓவரில் ஆட்டமிழந்தார்.

தொடக்கத்தில் சற்று மெதுவாக ஆடிய விராட் கோலி பின்னர் வேகமாக ரன் சேர்த்தார். அதைவிட முக்கியமாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன் சேர்த்தார். ஹார்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் ஆகியோ இன்றும் சரியாக ஆடவில்லை. அஷ்வின் 6 பந்துகளில் 13 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்திருந்தது.


இது ஒரு நல்ல ஸ்கோர். வங்கதேச அணி இதனை அடைய மிகவும் கஷ்டப்படும் என்று நினைத்திருந்த வேளையில் வங்கதேச அணியின் லிட்டன் தாஸும் மழையும் இந்தியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தன.

லிட்டன்தாசின் 56 ரன்னால் வங்கதேச அணி பவர்ப்ளே முடிவில் விக்கட் இழப்பின்றி 60 ரன் எடுத்திருந்தது. அடுத்த ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டது. ஆனால் ஒரு சில நிமிட நேர மழைக்குப் பின்னர், அரை மணி நேர தடைக்குப் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அப்போது வங்கதேச அணி 16 ஓவரில் 151 ரன் எடுக்க வேண்டும் என டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி முடிவு செய்யப்பட்டது.
மீண்டும் ஆட்டம் தொடங்கிய பின்னர் அஷ்வின் வீசிய முதல் ஓவரில் கே.எல்.ராகுல் வீசிய ஒரு த்ரோவால் லிட்டன்தாஸ் ரன் அவுட் ஆனார். லிட்டன்தாஸ் இரண்டாவது ரன்னுக்காக ஓடியபோது வழுக்கி விழுந்தார்.

12ஆவது ஓவரில் அர்ஷதீப் இரண்டு விக்கட்டுகளையும், 13ஆவது ஓவரில் ஹார்திக் பாண்ட்யா இரண்டு விக்கட்டுகளையும் எடுத்தனர். அந்த சமயத்தில் 18 பந்துகளில் 43 ரன் எடுக்கவேண்டியிருந்தது. வங்கதேச அணியால் அதனை எடுக்க முடியவில்லை. எனவே இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


இந்த வெற்றியால் இந்திய அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாபே அணியை சந்திக்க உள்ளது. இந்தியா அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது எனச் சொல்லலாம்.

நாளை நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் ஆட்டத்தில்

தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்குச் செல்வது உறுதியாகிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories