தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றி விளையாட்டு அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
12 பள்ளிகள் பங்கு கொண்ட இந்தப் போட்டியில் இறுதிப் போட்டியில் வெஸ்லி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மதரசா மேல்நிலைப் பள்ளிகள் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் சமநிலை ஏற்பட்டதால் டைப்ரைக்கர் முறையில் வெஸ்லி அணி கோப்பையை வென்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கலைமகள் மாத இதழ் ஆசிரியர் திரு. சங்கர சுப்பிரமணியம் மற்றும் கலைமகள் நாளிதழ் பதிப்பாளர் திரு பி டி டி ராஜன் அவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் திரு ஹரி சங்கர வர்மா ராஜா அவர்கள், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கத்தின் தலைவர் திரு .தேவி செல்வம் அவர்கள் மற்றும் வெற்றி விளையாட்டு கட்டளையின் அறங்காவலர் திரு. தணிகைவேலன் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.