marina car parking - 2026

நீங்க சென்னை மெரீனாவுக்கு போறவங்களா… அப்ப இந்த அப்டேட்ட தெரிஞ்சுக்குங்க!

சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
marina car parking - 2026

நீங்கள் சென்னை மெரினா கடற்கரை பக்கம் அடிக்கடி செல்பவராக இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். காரணம் நீங்கள் முன்பு போல் இங்கே அவ்வளவு சுலபமாக இனிமேல் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் பயணிக்க முடியாது.

சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் மெரினா சர்வே சாலையில் இனி செல்ல முடியாது.

இந்த நடைமுறை நாளை (ஜூலை 6) முதல் அமலுக்கு வருகிறது. ஓராண்டுக்கு இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, மெரினா சர்வீஸ் சாலையை முழுவதுமாக நீங்கள் இனி பயன்படுத்த முடியாது. மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதியில் போக்குவரத்து முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

மெரீனா சர்வீஸ் சாலைக்கு இடையில் உள்ள பாதைகளில் காமராஜர் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றும், சர்வீஸ் சாலையில் யுடர்ன் – U Turn-க்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை இந்த மாற்றம் குறித்து அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.