மத்திய அரசை விமர்சனம் செய்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மா கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ‘ விருப்பு வெறுப்பு காட்டாத விருந்தோம்பல் மண்ணில், எங்கு நோக்கினாலும் மக்களிடம் கருப்பும், கடுப்பும் வெளிப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நீட்டுக்கு விலக்கு, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு விலக்கு கேட்டும் தரப்படவில்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வர்தா புயலுக்கு நிவாரணம் தராதது, நெடுவாசல் துயரத்துக்கு தடை விதிக்காதது என மத்திய அரசுக்கு எதிராக தமிழர்களின் உணர்வுகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
வரிவருவாயில் தமிழமே இரண்டாவது பெரிய மாநிலமாக இருந்தும் தொடர்ந்து வஞ்சித்தே வருவதால் வெறுப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. எது கேட்டாலும் இழுத்தடிப்பதும், ஹெச். ராஜா, தமிழிசை ஆகியோரின் ஏச்சுகளாலும் எங்கும் ஏக கொதிப்பாக இருப்பதாகவும் அந்த நாளேடு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரபட்சம், பாராமுகம் காட்டாமல் மத்திய அரசு மனப்போக்கை மாற்றுவதே சிறப்பு என்றும் தவறினால் ஒற்றுமை ஒருமைப்பாட்டில் உருவாக்கி விடுமே வெடிப்பு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இனியாவது தாமரை கட்சிக்கு புரியட்டும், தமிழினத்தின் தன்மானம் குன்றாத வியப்பு’ என பாரதிய ஜனதா மற்றும் மத்திய அரசுக்கு நமது அம்மா நாளேடு கட்டுரை மூலம் ஆளும் அதிமுக விமர்சனம் மூலம் சுட்டிக் காட்டியுள்ளது