மீனாட்சி கல்லூரியில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி

சென்னை மீனாட்சி கல்லூரியில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 ஏ1 சார்பாக இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் தலைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடன் அரிமா மாவட்ட ஆளுநர் ஜி.எம். பாலாஜி ரத்தினம், மீனாட்சி கல்லூரி முதல்வர் அரிமா கே.எஸ். லட்சுமி, துணை ஆளுநர் டி.எம். குணராஜா, அரிமா மாவட்டத் தலைவர்கள் எஸ்.வி. மாணிக்கம், கே. சந்திரசேகர், கே.எல்.வி. ராமாராவ், டி. துர்கா பிரசாத், ஆர். வெங்கடேசன், அரிமா நா. கண்ணன் மற்றும் அரிமா மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.