உளுந்தூர்ப்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் பின்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியில் ஒன்று உளுந்தூர்பேட்டை. மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாகவும், அதிக வாககாளர்களை கொண்ட தொகுதியாக விளங்கும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி தொகுதி 1952 முதல் 1994-ம் ஆண்டு வரை கடலூர் மாவட்டத்தில் இருந்தது. அதில் உந்தூர்பேட்டை, ஒன்றியம், திருநாவலூர் ஒன்றியம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் திருவெண்ணைநல்லூர், அரசூர், சித்தானங்கூர் உட்பட உளுந்தூர்பேட்டை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 1952 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 6 முறை திமுக, 4 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ், ஒருமுறை சுயேட்சை வென்றார்.
கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலின் போது திமுகவைச் சேர்ந்த திருநாவுக்கரசும், 2011-ல் உள்ள அதிமுகவைச் சேர்ந்த குமரகுருவும் வெற்றி பெற்றனர்.



