வெடி இப்படி போடுங்க! அப்படி போடாதீங்க! அறிவுறுத்தும் மாசு கட்டுப்பாடு வாரியம்!
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவா்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!
அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை 354 திருத்தம் ஏற்படுத்த வேண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 வார கால அவகாசம் கோரியது தேர்தல் ஆணையம்!
உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது!
முதல்வருக்கு வைரக் கிரீடம் சூட்டியுள்ளார்கள்: ராஜேந்திர பாலாஜி!
இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வைரக் கிரீடத்தையே சூட்டியிருக்கிறார்கள் என்றார்.
மக்கள் எங்கள் பக்கம்: மார்தட்டும் ராமதாஸ்!
இந்த வெற்றி சாதாரணமான வெற்றி அல்ல; சிறப்பான வெற்றி. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுமே எதிர்க்கட்சிகள் வசம் இருந்தவையாகும்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால் உரிய நடவடிக்கை: முதல்வர்!
விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளும் ஏற்கெனவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வென்ற தொகுதிகள். இப்போது அத்தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி.
இடைத்தேர்தல் முடிவுகள்… இந்து விரோத தீய சக்திகளுக்கு வாக்காளர்கள் கொடுத்த மரண அடி: ஹெச்.ராஜா!
தமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி… என்று கருத்து தெரிவித்திருக்கிறார்...
அதிமுக.,வினர் கொண்டாட்டம்! உண்மைக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் எடப்பாடியார்!
விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக., வெற்றி முகத்தில் உள்ளது. இதை அடுத்து அதிமுக.,வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாண்டவர் படைக்கு முன்னால் கவுரவப் படை ஓடி ஒளிந்திருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்!
திருமங்கலம் ஃபார்முலாவை அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கையாண்டது. பிள்ளைகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்து ஏமாற்றுவது போல பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த மக்களவை தேர்தலில் திமுக வென்றது. இதனை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
அச்சுறுத்தும் ஆளுங்கட்சி அஞ்சாதே..! விஜய்க்கு சீமான் தரும் அறிவுரை!
செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, இதனால் அதிகாரத்தினர் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தெரிவித்துள்ளார்.
உளறாம சொல்லுங்க… முரசொலி நிலத்துக்கு பத்திரம் உண்டா… இல்லியா? : கேட்குது பாமக.,!
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்டாலின் பதற்றத்தில் உளற வேண்டாம்: முரசொலி நிலத்திற்கு பத்திரம் உண்டா… இல்லையா? தெளிவான பதில் தேவை!’ என்று கேட்டிருக்கிறார்.
காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!
ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி (நிர்வாகப் பிரிவு) ப.கந்தசாமி, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆர்.தின கரன், சென்னை மனநல காப்பக காவல் நிலைய தலைமைக் காவலர் சா.டெய்சி ஆகியோர் உட்பட 16 பேர், முதல்வரின் பதக்கத்தைப் பெற்றனர்.