
உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது!
உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார காலம் அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை அக்.31-ஆம் தேதிக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.



