சென்னை

‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

மறைந்த இசைமேதை  எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும்  வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ்.  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு'கேட் லாக்' கை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது, "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலேஅவரது அழகிய தோற்றமும்,  மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது்  தோற்றமேஇந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது. அவர் சினிமாவிலும் பெரிய வெற்றி பெற்று இசையுலகிற்காகத்  தன்னை அர்ப்பணித்துப் புகழ் பெற்று விளங்கினார். அவருக்குக் கிடைக்காத விருதுகளும் இல்லை . பெருமைகளும் இல்லை எனலாம். .அப்படிப்பட்ட எம், எஸ். அம்மா அவர்களின் பலவித முக பாவங்கள் கொண்ட ஓவியங்கள், பலவித தோற்றத்திலான ஓவியங்கள் என அரிய முயற்சியாக இருந்தது. அது மட்டுமல்ல எம்.எஸ். பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியும் இருந்தது. இம் முயற்சியில்  வெங்கடேசன், உதயசங்கர் என இரு இளைஞ ர்கள் ஈடுபட்டு செய்து இருப்பது பாராட்டுக்குரியது. இதைநார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற ஏழு நாடுகளிலும் நடத்த இருக்கிறார்கள். நம் நாட்டு தொன்மையை கலைப்பெருமையை நாடு கடந்து கொண்டு சேர்க்கும் இம்முயற்சி  பாராட்டுக்குரியது. "என்றார். வருமான வரித்துறை ஆணையாளர் டாக்டர் சீனிவாசராவ் பேசும் போது, '"நான் ஆந்திராக்காரர் . இன்று இங்கே கூடியிருப்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உண்மையிலே இது ஒரு மிராக்கள் தான் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் நாம் இங்கே ஒன்றாக இருப்பதேநம்மை இணைத்து இருப்பதே இசையின் எம்.எஸ்ஸின் தெய்வீக சக்தி என்றே சொல்ல வேண்டும். இங்கே கண்காட்சியை பார்த்தேன். பாவங்களில் நவரசங்கள்தான்  இருக்கிறது என்பார்கள் ஆனால் இங்குவரையப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருக்கிற ஓவியங்களில் நவரசங்களைத் தாண்டிய பாவங்களைப் பார்த்தேன். இந்த அவசர உலகத்தில் கலையை ரசிக்கவும்  கலைஞர்களை மரியாதை செய்யவும் யாருக்கும் தோன்றுவதில்லை. அதற்கு நேரமில்லை. இந்தக் காலத்தில் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெங்கடேசன்,உதயசங்கர் இருவரையும் பாராட்டுகிறேன். இது உலகின் பிற நாடுகளுக்கும் செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது " என்றார். நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கடேசன் பேசும் போது , " தமிழ்ச் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டு எம் எஸ் அம்மாவின் நூற்றாண்டும் கூட. இதையொட்டி ,'தமிழ் ஐகான்ஸ்'  கேட்லாக் வெளியீட்டுவிழா : படங்கள்: கேலரி! என்கிற பெயரில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற சிறந்த ஆளுமைகளை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் பணியை சாய்மீராமீடியாஸ் கொண்டு செல்ல விருக்கிறது. முதலில் எம் எஸ் அம்மாவிடமிருந்து தொடங்குகிறோம். இந்த  ஆரட் கேலரி யை நிறைய பேர் பார்த்துப் பாராட்டினார்கள். இம்முயற்சியில் என்னுடன் இணைந்துகொண்டிருக்கிறார் உதயசங்கர்.எங்கள் பணி தொடரும்'' என்றார். இந்நிகழ்ச்சியில் 'மியூசி மியூசிக்கல்' ஹரிச்சரன்தாஸ் உள்ளிட்ட இசை ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

கர்நாடக அரசை கலைப்பது தான் தீர்வா? : ராமதாஸ்

காவிரி பிடிவாதம் பிடிப்பதால், கர்நாடக அரசை கனத்த இதயத்துடன் கலைப்பது தான் தீர்வாஎன்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் நாளை முதல்...

நான் பதவி விலகவில்லை: வதந்தி என்கிறார் கருணாஸ்

 நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து நான் விலகவில்லை என்றும், சமூக வலைதளங்களில் வந்த தகவல் வதந்தி என்றும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.  

தமிழரைத் தாக்கிய கன்னட இளைஞர்களை கைது செய்யாவிட்டால் எதிர்வினை ஏற்படும்: பெ.மணியரசன்

தமிழரைத் தாக்கிய கன்னட இளைஞர்களை கைது செய்யாவிட்டால்  தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.பெங்களுருவில் நேற்று (10.09.2016)...

தமிழ் இளைஞரை தாக்கிய  கன்னட வெறியர்களை கைது செய்க: ராமதாஸ்

தமிழ் இளைஞரை தாக்கிய  கன்னட வெறியர்களை கைது செய்ய வேண்டும் என்று  பாமகநிறுவுனர்  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயம் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக தமிழ் இளைஞர் ஒருவர்...

ஊழலுக்கு எதிரான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்: உ.சகாயம்

லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் வலியுறுத்தினார்.கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் "ஊழிக் கூத்தாடும் ஊழலில் இருந்து...
- 2026

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

சென்னை: காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் இடியுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கக் கடலின் வெளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் சில இடங்களில்...

பெண் கொடுக்க மறுத்ததால் காதலன் தீக்குளிப்பு; காதலி தூக்கில் தொங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த கவிதாசனின் மகள் செல்வி என்கிற நுண்மதி பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் (18)....

அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு:  திரும்பப் பெற ராமதாஸ் வலியுறுத்தல்

 சென்னை:அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு என்பதுவிமானத்தை விட அதிகமாக இருப்பது என்று கூறி, இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்அவர் வெளியிட்ட அறிக்கை:இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி,...

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் கிண்டியைச் சேர்ந்த...

டெங்கு அறிகுறி தென்பட்டால் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறாதீர்: சுகாதார துறை செயலர்

சென்னை:டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என தமிழக சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தமிழக சுகாதார துறை...

ஓணம் பண்டிகைக்கு சென்னையில் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14 -ஆம் தேதி (புதன்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு அரசு உத்தரவுப்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக அக்டோபர் 8 -ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள்,...
- 2026

Recent articles