
புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.31) விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்காலிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையை அடுத்து ஊட்டி, குந்தா, குன்னூர் , கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்க நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அதிக மழை பொழிவு காரணமாக 4 தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நவ.,2ஆம் தேதி வரை மலை போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



