இதோ ஒரு நிஜ ‘சாத்தான்’குளம்! செத்தவர் சிவனடியார்! காரணமானவர் கிறிஸ்துவ எஸ்.ஐ.,! ‘ஆவி’ பழிதீர்ப்பின் ‘நீதி’ கிட்டும்!

Published:

saravanan-suicide-case
saravanan-suicide-case

சிவனடியாரை அடித்து….
தற்கொலைக்கு தூண்டிய கிறிஸ்துவ எஸ்.ஐ,!
நடவடிக்கை கோரும் இந்து அமைப்புகள்!

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த எஸ்.ஐ., ஒருவர், சிவனடியார் ஒருவரை உள்நோக்கத்துடன் மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட, சிவனடியார் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, தனது ஆத்மா எஸ்ஐ குடும்பத்தை சும்மா விடாது; துரத்தி பழிவாங்கும் என்று சாபம் விட்டு சிவனடியார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு சமூகத் தளங்களில் வைரலாகியுள்ளது! 

சிவனடியார் உயிரிழந்த விவகாரத்தில் நீதி வேண்டும் என அவரது குடும்பத்தினர் இப்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புளியம்பட்டி குண்டாங்கல் காடு பகுதியை சேர்ந்த சரவணன், சுற்றுவட்டார மக்களுக்கு தாயத்து கட்டுவது, மந்திரித்து கயிறு கட்டுவது, பேய் ஓட்டுவது முதலிய மாந்திரீகப் பணிகளைச் செய்து வந்துள்ளார். அவரால் நலம் பெற்ற அப்பகுதி மக்கள், அவரை சிவனடியார் என்றே அழைத்து வந்துள்ளனர். 

கடந்த வாரம் அவரைப் பார்க்க வந்த பெண்மணி ஒருவருக்கு தாயத்து கட்டிவிட்டு அவர் வாங்கி வந்த உணவை சரவணன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கே வந்த தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி, சிவனடியார் சரவணனையும் அப்பெண்மணியையும் சரமாரியாக அடித்தாராம்.  இருவரையும் தனது செல்போனில் படம் பிடித்து, அசிங்கமாக செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். 

எஸ்ஐ மைக்கேல் ஆண்டணி சிவனடியாரை தாக்கிய போது அவரது மகன் சங்கர், மகள் கவிதா இருவரும் அதனை நேரில் பார்த்துள்ளனர். தனது பிள்ளைகளின் கண் முன்னே எஸ்ஐ ஆண்டனி தன்னை அடித்ததால் மனமுடைந்த சரவணன் சனிக்கிழமை காலை வீட்டை விட்டுச் சென்றாராம். 

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்நிலையில் இரு நாள் கழித்து சரவணன் வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் உறவினர்கள் அங்கே சென்று பார்த்த போது, சரவணனின் உடல் தான் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

சிவனடியார் சரவணன் நான் தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக தனது தற்கொலைக்கு காரணம்  உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி என்று குறிப்பிட்டு தனது ஆன்மா நிச்சயம் அந்தோணியின் குடும்பத்தை படிப்பும் விடவே விடாது என்று பதிவு செய்து வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூகத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது

இந்த நிலையில் சிவனடியார் சரவணன்  குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார் அவரது உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர் 

உதவி ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி தனது கணவரை மிரட்டியதாகவும் பொலிஸார் குறித்த அச்சத்தாலும்  இந்த விவகாரம் குறித்து புகார் எதுவும் காவல் நிலையத்தில் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட சிவனடியார் சரவணனின் மனைவி பின்னர் நடந்தவை குறித்து  போலீசாரிடம் தெரிவித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர் 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

போலீஸ் அதிகாரி அடித்து மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்ட தனது கணவரின் மரண விவகாரத்தில்  உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சிவனடியார் மனைவி,அவரது மகன் மற்றும் உறவினர்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.  

சிவனடியார் சரவணன் மாந்திரீக பூஜைகளிலும் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து அதுகுறித்து விசாரிக்க சென்றதாக எஸ் ஐ தரப்பில் தெரிவிக்க பட்டதாம்  ஆனால் இந்த விவகாரம் உள்நோக்கத்துடன் கூடியது என்று பலரும் தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் புளியம்பட்டியில் சிவனடியார் சரவணன் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் 5 நாட்களுக்கு முன் துணை ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் சிவனடியார் தியானத்தில் இருந்த போது அவரது வீட்டிற்குச் சென்று அவரை தாக்கி இழிவாக பேசியுள்ளார். அதனால் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேற்படி சரவணன் அவர்களின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்தோனி மைக்கேல் உடனடியாக கைது செய்யப்பட்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா டிவிட்டர் பதிவின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் அங்குள்ள வேற்று மதத்தை சேர்ந்த மக்களால் ஹிந்து மதத்தைச் சேர்ந்த சாதுக்கள் இருவர் போலீசார் கண் முன்பே அடித்தே கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது இந்த விவகாரத்தில் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் 

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அன்மையில் வர்த்தகர்கள் இருவர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் சர்வதேச அளவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது காரணம் சாத்தான்குளத்தில் உயிரிழந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அதே நேரம் இப்போது கிறிஸ்தவ அதிகாரி ஒருவரால் மன ரீதியில் துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சிவனடியார் ஒருவர் குறித்த எந்த விவாதமும் தகவலும் ஊடகங்களில் வெளிவரவில்லை அரசியல் மட்டத்திலும் எவரும் கண்டுகொள்ளவில்லை 

இத்தகைய போக்கு சமூக தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தை போல் நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணை எல்லாம் செய்யாது காரணம் உயிரிழந்தவர் அப்பாவி இந்து மதத்தை சார்ந்தவர் 

எனவேதான் நாட்டு நடப்பும் உலகியல் விவகாரமும் நன்றாக தெரிந்து கொண்ட அந்த சிவனடியார், தனது ஆவி மட்டுமே தவறிழைத்த நபரை பழிவாங்கும்; தண்டனை தரும் என்று நம்பி அவ்வாறு வீடியோ பதிவு செய்துள்ளார் என்கிற கருத்தையும் சமூகத் தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img