எழில் கொஞ்சும் இயற்கை அன்னையின் வரப் பிரசாதமாக விளங்குவது நீலகிரியிலுள்ள தாவரவியல் பூங்கா.
ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு செய்ய கோரி 6-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிரந்தர பணியாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணிபுரிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.