
மதுரை அழகர் கோவிலில், கள்ளழகர் வசந்த உத்ஸவ திருவிழா இன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று பக்தர்கள் இன்றி இந்தத் திருவிழா நடைபெற்றது.

நேற்று மாலை அருள்மிகு கள்ளழகர் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி உபய நாச்சியார்களுடன் தெற்கு பிராகாரத்தில் அலங்காரம் செய்து யோக நரசிம்மர் சன்னதி வழியாக பல்லக்கில் புறப்பாடானார்.

இவ்வாறு தினந்தோறும் மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது .

தற்போது வசந்த உத்ஸவத்தின் 7 ம் திருநாள் சூர்ணோற்சவம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டு பூஜை அருள்மிகு கள்ளழகருக்கு படைக்கும் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை