
கொரோனா நிவாரண நிதியாக தான் யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை, பூல்பாண்டி என்பவர், ஏற்கெனவே வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும், தான் யாசகமாக பெற்ற ரூ 10 ஆயிரத்தை இரண்டாம் முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
தூத்துக்குடி ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல் பாண்டி என்பவர், தற்போது மதுரை பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தாம் பிச்சை எடுத்து சேர்த்த பணம் ரூ.10 ஆயிரத்தை கடந்த மே.18 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியிருந்தார்.
தற்போது மேலும் 15 நாள்கள் கழிந்த நிலையில் தாம் யாசகமாக பெற்ற ரூ.10 ஆயிரத்தை இரண்டாவது முறையாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இவருக்கு பொது மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை