
கொரானாவை ஒழிப்போம்… பாதுகாப்புடன் இருப்போம்; முக கவசம் அணிவோம் சமுக இடைவெளியுடன் இருப்போம் என்ற உறுதிமொழியுடன் கொரோனா எதிர்ப்பு உறுதி மொழியுடன் புத்தாண்டை வரவேற்றனர் யோகா மாணவர்கள்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் சல்மான்கான், அசாருதீன் உள்ளிட்ட சிறுவர்கள், இன்று பிறந்த சித்திரை பிலவ தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொரோனாவை ஒழிப்போம் பாதுகாப்புடன் இருப்போம் எனக் கூறி யோகாசனம் மற்றும் சிலம்பம், யோக பயிற்சிகள், சிலம்பத்தில் தற்காப்பு மற்றும் அலங்கார சிலம்பம் விளையாட்டை தாங்கள் கைவண்ணத்தைக் காட்டினர்.
கொரானாவை ஒழிப்போம். பாதுகாப்புடன் இருப்போம் .முக கவசம் அணிவோம் சமூக இடைவெளியுடன் இருப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்து சித்திரை முதல் நாளான இன்று “பிலவ” தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றது சிலிர்க்கும் விதமாக இருந்தது.