IMG 20220425 163548 - 2026

மதுரை அருகில் தடம்புரண்ட சரக்கு ரயில் ..

மதுரை

மதுரை நோக்கி வந்த சரக்கு ரயில் கூடல்நகரில் இன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அருகே வாடிப்பட்டியில் உள்ள டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்துக்கு டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு பராமரிப்புக்காக வந்தபோது ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது. இதனை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், மதுரை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. குருவாயூர் – சென்னை ரயில், மதுரை பாலம் பகுதியில் நிறுத்தப்பட்டது.மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குருவாயூர் விரைவு ரயில் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்று பாதை மூலம் சேவை துவக்கப்பட்டது. தடம்புரண்ட ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் தொழில்நுட்பக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

IMG 20220425 163548 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.