திண்டுக்கல் பிறந்து 1 மாதமான ஆண்குழந்தைக்கு மது ஊட்டிய பெண்.‌.

1762654 sayednazir04 - 2026

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தைக்கு மது குடிக்க வைத்த பெண்ணால்ல் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தையை கையில் வைத்து அந்த குழந்தைக்கு வாயில் மதுஊற்றி கொடுத்துக்கொண்டே இருந்தார்.

மேலும் தானும் மதுபானம் குடித்துகொண்டு அந்த குழந்தையை அடித்து கொண்டே இருந்தார். இதைபார்த்த அப்பகுதி வியாபாரிகள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அந்த குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆவதாகவும், தான் கரூரில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் இருந்த குழந்தையை வாங்கி பார்த்தபோது அது மயக்கத்தில் இருந்தது. மேலும் அந்த போதை பெண்ணின் மடியில் மேலும் சில மதுபாட்டில்களை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

2 கிலோ 600 கிராம் எடை கொண்ட அந்த ஆண்குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள்தான் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். போதையில் திரிந்த பெண் அது தனது குழந்தை என்று சொல்லிக்கொண்டே நடக்கமுடியாமல் தள்ளாடி கீழே விழுந்தார். ஆனால் 50 வயது மதிக்கத்தக்க அவர் உண்மையிலேயே அந்த குழந்தையின் தாயா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

அவர் வைத்திருந்த பையில் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த குழந்தை கடத்தி வரப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் இருந்த பெண்ணை மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் தற்போது சிகிச்சையில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories