ஜெயலலிதா மரண அறிக்கை- விஜயபாஸ்கர் குறித்து விதித்த இடைக்கால தடையை நீக்க நீதிபதி மறுப்பு..

images 2023 03 01T154835.687 - 2026

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் தங்களது அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்றிருந்தது.

இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் எனது பெயர் சேர்க்கப்பட்டதற்கும் குற்றம் சாட்டப்பட்டதற்கும் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக முறையீடு செய்யப்பட்டது. அதன் பேரில் செவ்வாய் கிழமை அந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

முடிவில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை பயன்படுத்தவும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க வலியுறுத்தி அரசு தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை இன்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தார்.

அத்வானி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை நீதிபதி சுவாமிநாதன் சுட்டிக்காட்டி தடையை நீக்க மறுப்பு தெரிவித்தார். விசாரணைக்காக அழைத்து மனுதாரர் மீது குற்றம்சாட்டுவது எப்படி? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories