மதுரை மாவட்டத்தில், உள்ள கோயில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுடன் தொடங்கியது.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மதுரை திண்டுக்கல் ரோடு பால தண்டாயுபாணி திருக்கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை நகரில் அண்ணா நகர் தாசில்தார் நகர், சௌபாக்கிய விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், வரசித்து விநாயகர் ஆலயம், மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன், ஞான சித்தி விநாயகர் ஆலயம், அருள்மிகு சர்வேஸ்வர விழா ஆலயம், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம், சோழவந்தான் விசாக நட்சத்திரம் நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயம், தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாதர் சுவாமி ஆலயம் உட்பட கோயில்களில் கந்த சஷ்டி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள முருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷே அத்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி விரதத்தை தொடங்கினர். மதுரை அண்ணா நகர் சௌபாக்கியம் ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப் பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.