
மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கையை குறைத்து ஸ்லீப்பர் பெட்டிகளை அதிகரித்துள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழியாக இயங்கும் கொல்லம் மெயில் வேளாங்கண்ணி விரைவு ரயில்களில் நின்று பயணிக்க கூட இடம் கிடைக்காத சூழலில் பயணிகள் குருவாயூர் மதுரை குருவாயூர் ரயிலை அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ரயில் பொது பெட்டிகள் குறைக்கப்பட்ட தால் பயணிகள் பாடு இனி திண்டாட்டம் தான்.
மதுரை- – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை- – கொல்லம் எக்ஸ்பிரஸ், புனலுார் — குருவாயூர் இன்டர்சிட்டி ஆகிய மூன்று ரயில்களை இணைத்து 2023 ஆகஸ்ட் முதல் மதுரை- – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16327/16328) ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் 9 முன்பதிவு இல்லாத பெட்டிகள், மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் 2, குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் உள்ளன.
மதுரை– செங்கோட்டை, செங்கோட்டை– கொல்லம், குருவாயூர்– புனலூர் ஆகிய 3 முன்பதிவில்லா பயணிகள் ரயில்களையும் இணைத்து மதுரை – -குருவாயூர் இன்டர்சிட்டி ரயில் ஆக. 27 முதல் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து தினமும் காலை 11:20 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், ராஜபாளையம் செங்கோட்டை, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக மறுநாள் நள்ளிரவு 2:10 மணிக்கு குருவாயூர் சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் குருவாயூரில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் ரயில் இயக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து குருவாயூருக்கு மூன்றடுக்கு ஏ.சி பெட்டியில் பயணிக்க ரூ. 845, ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்க ரூ.315 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த ரயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்றும், ஸ்லீப்பர் பெட்டிகள் 2ம், முன்பதிவில்லா பெட்டிகள் 10 உட்பட 14 பெட்டிகள் உள்ளன.
இந்த ரயில் மதுரை குருவாயூர் இடையே 519 கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 மணி நேரம் பயணிக்கிறது. ஆனால், சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 5:45 மணிக்கு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் வழியாக சுற்றி 603 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் பயணிக்கிறது.
ஆனால் மதுரை-ராஜபாளையம்-செங்கோட்டை குருவாயூர் ரயில் இயற்கை எழில் கொஞ்சும் மலை வழியாக பகலில் செல்வதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது
இதனால் தற்போது சி.பி.சி தொழில்நுட்பத்தில் மறு சீரமைக்கப்பட்ட பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. சி.பி.சி தொழில்நுட்பத்தில் பெட்டிகளை தானியங்கி இணைக்கும் வசதி, விபத்துகளின் போது பெட்டிகள் ஒன்றுக்கொன்று ஏறுவதை தடுத்தல், தடம் புரள்வது மற்றும் விபத்தை தடுக்கும் அம்சத்துடன் 24 பெட்டிகள் இழுக்கும் திறனுடன் உள்ளது.
ஏற்கனவே முன்பதிவு பெட்டிகளில் இடமில்லாமல் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவதால் முன்பதிவு பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் சார்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஏப். 15- முதல் முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கையை 9-ல் இருந்து 5 ஆக குறைத்து, ஸ்லீப்பர் பெட்டிகள் 2-ல் இருந்து 6-ஆக அதிகரித்து ரயில்வே அறிவித்துள்ளது.
2023 வரை மதுரை- -செங்கோட்டை பாசஞ்சர் 14 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. 3 ரயில்களை இணைத்து பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்த நிலையில் தற்போது முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுவது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை- புனலுார் மலை ரயில் பாதையில் 21 எல்.எச்.பி அல்லது 24 ஐ.சி.எப் பெட்டிகளுடன் ரயில் இயக்க ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ள நிலையில் கூடுதல் பெட்டிகளை இணைக்காமல் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, செங்கோட்டை பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழியாக இயங்கும் கொல்லம் மெயில் வேளாங்கண்ணி விரைவு ரயில்களில் நின்று பயணிக்க கூட இடம் கிடைக்காத சூழலில் பயணிகள் குருவாயூர் மதுரை குருவாயூர் ரயிலை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த ரயில் பொது பெட்டிகள் குறைக்கப்பட்ட தால் பயணிகள் பாடு இனி திண்டாட்டமாகத்தான் இருக்கும். எனவே பயணிகள் நலன் கருதி இந்த ரயிலிலும் செங்கோட்டை மயிலாடுதுறை ரயிலிலும் கூடுதலாக ஐந்து பொது பெட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.